கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

இனவெறிக்கு உள்ளானதாக வினிசியஸ் புகார்..! ரியல் மாட்ரிட் வெற்றியும் சர்ச்சையும்!

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இனவெறிக்கு உள்ளான ரியல் மாட்ரிட் வீரர் குறித்து...

News image

வினிசியஸ் ஜூனியர். - படம்: ஏபி

Updated On :18 பிப்ரவரி 2026, 6:01 pm IST

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் வீரர் வினிசியஸ் ஜூனியர் இனவெறிக்கு உள்ளாகியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

பென்ஃபிகா உடனான பிளே ஆப்ஸ் ஆட்டத்தில் வினிசியஸ் ஜூனியருக்கு நிகழ்ந்த இந்தக் கொடூரமான செயலுக்கு கால்பந்து உலகில் சர்ச்சை வெடித்துள்ளது.

சாம்பியன்ஸ் லீக்கில் பென்ஃபிகாவும் ரியல் மாட்ரிட் அணியும் முதல் கட்ட பிளே ஆப்ஸில் மோதின. இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் 1-0 என வென்றது.

இந்தப் போட்டியில் பென்ஃபிகா அணியின் வீரர் ஜியான்லுகா பிரெஸ்டியானி ரியல் மாட்ரிட் அணியின் வீரர் வினிசியஸ் ஜூனியரை குரங்கு எனக் கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்தப் புகாரினால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. பென்ஃபிகா வீரர் தான் அப்படி எதுவும் கூறவில்லை எனக் கூறினார். அந்த அணியும் எக்ஸில் விடியோ வெளியிட்டு, “இவ்வளவு தூரத்தில் இருக்கும் ரியல் மாட்ரிட் வீரர்களுக்கு என்ன கேட்டது?” எனப் பதிவிட்டுள்ளது.

இதே போட்டியில் ஆர்ஜென்டீன வீரர் ஓடமென்டி தன்னிடம் உலகக் கோப்பை இருப்பதாகவும் வினிசியஸிடம் என்ன இருக்கிறதெனவும் கூறியது வைரலானது.

இந்தப் போட்டியில் வினிசியஸ் 50ஆவது நிமிஷத்தில் சிறப்பான ஒரு கோல் அடித்ததும் அவரது ஆபாசமான கொண்டாட்டத்துக்கு மஞ்சள் கார்டு அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் காரணத்தினால் பெஃபிகா அணியினர் அவர் மீது தண்ணீர் பாட்டிகளை வீசி எறிந்தனர்.

வினிசியஸ் மீது தண்ணீர் பாட்டிகளை வீசி எறிந்த பெஃபிகா அணியினர்.

வினிசியஸ் மீது தண்ணீர் பாட்டிகளை வீசி எறிந்த பெஃபிகா அணியினர். - ஏபி

முந்தைய 2024 பேலந்தோர் விருதிலும் தன்னை இன ரீதியாகப் பாகுபாடு காட்டியதாலே விருது மறுக்கப்பட்டதாகக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி பேலந்தோர் விருது நிகழ்வைப் புறக்கணித்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சீசனில் சுமாராக விளையாடிய வினிசியஸ் இந்த சீசனில் மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறார்.

Summary

Champions League: Vinicius Junior says he was racially insulted in Real Madrid win.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.