டி20 உலகக் கோப்பையின் முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களில் 199/3 ரன்கள் குவித்தது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் சதம் அடித்து அசத்தினார்.
டி20 உலகக் கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்தப் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அணியின் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 58 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
ஷதாப் கான் 22 பந்துகளில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வென்றால், சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறும். தோல்வியுற்றால் அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Sahibzada Farhan's century: Pakistan set a target of 200 runs for Namibia!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











