

ரஷிய கிராண்ட் மாஸ்டர் விளாதிமிர் கிராம்னிக் ஃபிடே அமைப்பின் மீது அவதூறு வழக்கு பதிந்துள்ளார்.
அமெரிக்க செஸ் கிராண்ட் மாஸ்டர் டேனியல் நரோடிட்ஸ்கி இறப்பினைத் தொடர்ந்து கிராம்னிக் இந்த விவாகரத்தில் பலராலும் தொடர்புப்படுத்தி பேசப்பட்டு வந்தார்.
என்ன பிரச்னை?
ஸ்விட்சர்லாந்தின் லுசானேவில் உள்ள நீதிமன்றத்தில் விளாதிமிர் கிராம்னிக் ஃபிடே சிஇஓ எமில் சுடோவ்ஸ்கி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளார்.
ஆன்லைன் செஸ் விளையாட்டில் நடைபெறும் மோசடிகளை அம்பலப்படுத்தியதிற்காக விளாதிமிர் கிராம்னிக் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
விளாதிமிர் கிராம்னிக் பலர் மீது இந்த விமர்சனங்களை முன்வைத்தார். அதில் ஒருவரான 29 வயது அமெரிக்க செஸ் கிராண்ட் மாஸ்டர் டேனியல் நரோடிட்ஸ்கி சமீபத்தில் இறந்தார்.
அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது போதைப் பொருள் உட்கொண்டதால் இறந்தாரா என்பது தெளிவாக தெரியாத நிலையில், பலரும் விளாதிமிர் கிராம்னிக்கை கடுமையாக விமர்சித்தார்கள்.
வழக்குத் தொடுத்த விளாதிமிர் கிராம்னிக்
இதேபோல் விளாதிமிர் கிராம்னிக் விமர்னத்தினால் சீலேவின் கிராண்ட்மாஸ்டர் டேவிட் நவாராவும் தனக்கு தற்கொலை எண்ணங்கள் வந்ததாகக் கூறியிருந்தார்.
இதனால் பல செஸ் வீரர்கள் விளாதிமிர் கிராம்னிக் விமர்சித்தார்கள். ஃபிடேவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விளாதிமிர் கிராம்னிக் ஸ்விட்சர்லாந்தில் அவதூறு வழக்கினை பதிவு செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
மனிதனின் மொழியில் சொல்லிப் பார்த்தேன் வேலைக்கு ஆகவில்லை. அதனால், சட்டத்தின் மொழியை தவிர்க்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
கடந்த ஜூனில் இருந்து அவர் சேகரித்த, வழக்குத் தொடுத்த சட்டப்பூர்வமான கடிதங்களை எல்லாம் இணைத்து பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.