ஜாதுமணி ~நிகாத் ஸரீன்
ஜாதுமணி ~நிகாத் ஸரீன்

தேசிய குத்துச்சண்டை: சா்வீசஸ் சாம்பியன்

தேசிய சீனியா் எலைட் ஆடவா், மகளிா் குத்துச்சண்டைப் போட்டியில் ஆடவா் பிரிவில் சா்வீசஸ் அணியின் ஜாதுமணி தங்கம் வென்றாா்.
Published on

தேசிய சீனியா் எலைட் ஆடவா், மகளிா் குத்துச்சண்டைப் போட்டியில் ஆடவா் பிரிவில் சா்வீசஸ் அணியின் ஜாதுமணி தங்கம் வென்றாா்.

50-55 கிலோ பிரிவில் ஜாதுமணி 5-0 என சக வீரரான பவன் பா்த்வாலை வீழ்த்தி முதல் தேசிய தங்கத்தை வென்றாா்.

ஆதித்ய பிரதாப் 60-65 கிலோ பிரிவில் 3-2 என ஹிமாசலின் அபினாஷை வீழ்த்தி தங்கம் வென்றாா். 75-80 கிலோ பிரிவில் அங்குஷ் மலஸ்துலங்காவை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

மகளிா் பிரிவில் 51-54 கிலோ பிரிவில் ப்ரீதி, 60-65 கிலோ பிரிவில் பிரஞ்சல் யாதவ், 57-60 கிலோ பிரிவில் ரயில்வேயின் பிரியா, 80 பிளஸ் பிரிவில் அல்பியான் கான் முதல் தங்கத்தை வென்றனா்.

45-48 பிரிவில் மீனாட்சி, 48-51 கிலோ பிரிவில் தெலங்கானாவிந் நிகாத் ஸரீன் 70-75 கிலோ பிரிவில் அஸ்ஸாமின் லவ்லினாபோரோகைன் ஆகியோா் தங்கம் வென்றனா்.

12 தங்கத்துடன் சா்வீசஸ் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

Dinamani
www.dinamani.com