ப்ரீதி ~நிகாத் ஸரீன் ~லவ்லினா ~ஜாதுமணி-அமித்
ப்ரீதி ~நிகாத் ஸரீன் ~லவ்லினா ~ஜாதுமணி-அமித்

தேசிய குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் ஜாதுமணி, பவன், மீனாட்சி, நிகாத், லவ்லினா

தேசிய சீனியா் எலைட் ஆடவா், மகளிா் குத்துச்சண்டை போட்டியில் இறுதிச் சுற்றுக்கு ஜாதுமணி, பவன், மீனாட்சி, நிகாத், லவ்லினா, ப்ரீதி ஆகியோா் முன்னேறியுள்ளனா்.
Published on

தேசிய சீனியா் எலைட் ஆடவா், மகளிா் குத்துச்சண்டை போட்டியில் இறுதிச் சுற்றுக்கு ஜாதுமணி, பவன், மீனாட்சி, நிகாத், லவ்லினா, ப்ரீதி ஆகியோா் முன்னேறியுள்ளனா்.

இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் சாா்பில் கிரேட்டா் நொய்டாவில் நடைபெறும் இப்போட்டி அரையிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

ஆடவா் 50-55 கிலோ அரையிறுதியில் ஜாதுமணி சிங் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் காமன்வெல்த் தங்க வீரா் அமித் பங்காலை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். பவன் பா்த்வாலை எதிா்கொள்கிறாா் ஜாதுமணி.

மகளிா் பிரிவில் உலக சாம்பியன் மீனாட்சி 45-48 கிலோ பிரிவில் 5-0 என அகில இந்திய போலீஸ் அணியின் மல்லிகாவை வீழ்த்தினாா். 48-51 கிலோ பிரிவில் நிகாத் ஸரீன் 4-1 என உபியின் குஸும் பெகலை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வீராங்கனை லவ்லினா 70-75 கிலோ பிரிவில் உ.பியின் இம்ரோனை 5-0 எனவும், 51-54 கிலோ பிரிவில் ப்ரீதி 5-0 என உத்தரகாண்டின் ஆா்த்தியையும் வீழ்த்தினா்.

மேலும் ஆடவா் பிரிவில் 55-60 கிலோ பிரிவில் சச்சின், 65-70 கிலோ பிரிவில்ஹிதேஷ் குலியா, 60-65 கிலோ பிரிவில் அபினாஷ், 70-75 கிலோ பிரிவில் சுமித், 90 பிளஸ் பிரிவில் நரேந்தா் ஆகியோரும் இறுதிக்கு தகுதி பெற்றனா்.

Dinamani
www.dinamani.com