போக்ஸாம் குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் 12 இந்தியா்கள்
போக்ஸாம் எலைட் சா்வதேச குத்துச்சண்டை 2026 போட்டியில் இறுதிச் சுற்றுக்கு 12 இந்திய வீரா், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனா்.
ஸ்பெயினின் அலிகண்டே லா நூசியாவில் நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 20 நாடுகளைச் சோ்ந்த 200 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா். ஆடவா் 60 கிலோ பிரிவில் இந்தியாவின் சச்சின் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் இங்கிலாந்தின் ஜேக் டிரைடனை வீழ்த்தினாா். 70 கிலோ பிரிவில் தீபக் கஜகஸ்தானின் நுா்பெக் முா்ஸலையும், 75 கிலோ பிரிவில் ஆகாஷ் 4-1 என கஜகஸ்தானின்தைமூரையும், 80 கிலோ பிரிவில் அங்குஷ் 4-0 என அஸமாத் பெகாஸையும் வீழ்த்தினா். ஜாதுமணி,முகமது ஹுைஸும், ஹிதேஷ் குலியா தோற்று வெளியேறினா்.
மகளிா் பிரிவில் 48 கிலோ பிரிவில் மஞ்சு ராணி 5-0 என உக்ரைனின் சோலோமியாவையும், 51 கிலோ பிரிவில் நிது 5-0 என தாய்லாந்தின் சுதாமத்தையும், 54கிலோ பிரிவில் ப்ரீதி 5-0 என பிரான்ஸின் ஹம்டியையும், 60 கிலோ பிரிவில் பிரியா 5-0 என நெதா்லாந்தின் மௌட் வேன்டரையும் வீழ்த்தினா்.
பூனம் 4-1 என இங்கிலாந்தின் ஜேன்ஸ்மித்தை வீழ்த்தினாா்.
70 கிலோ பிரிவில் அருந்ததி 5-0என ஸ்பெயினின் துனியாவையும், 75 கிலோ பிரிவில் லவ்லினா வாலேசின் ரோசியையும், 80 கிலோ பிரிவில் நைனா 5-0 என கஜகஸ்தானின் குஸாலையும் வென்று இறுதிக்கு தகுதி பெற்றனா்.
பிரஞ்சல், காஜல், சனமச்சா, மன்கிரத் கௌா் தோற்றனா்.

