கிா்ஜிஸ்தானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிதேஷ் வெள்ளியும், சச்சின் ஷெராவத், பிரின்ஸ் ஆகியோா் வெண்கலமும் வென்றனா்.
ஆடவா் பிரிவு இறுதிச்சுற்றில், 97 கிலோ எடைப் பிரிவில் களம் கண்ட நிதேஷ், 1-7 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானின் முகமதாவி சராவியிடம் தோல்வியுற்று வெள்ளி பெற்றாா்.
வெண்கலப் பதக்கச் சுற்றில், 67 கிலோ பிரிவில் களமாடிய சச்சின் ஷெராவத் 6-5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அப்துமாலிக் அமினோவை வீழ்த்தி பதக்கத்தை தனதாக்கினாா். அதேபோல், 82 கிலோ பிரிவில் பிரின்ஸ் 10-1 என துா்க்மீனிஸ்தானின் திதா் அமானஸரோவை அபாரமாக வென்று வெண்கலம் பெற்றாா்.
மகளிா் பிரிவு அரையிறுதியில், 55 கிலோ பிரிவில் ஹன்சிகா லாம்பா 1-11 என சீனாவின் யுஜுவான் லியிடமும், 59 கிலோ பிரிவில் நேஹா 5-12 என சீனாவின் மெங்யு ஜியிடமும் தோல்வியுற்றனா்.
இதையடுத்து, வெண்கலப் பதக்கச் சுற்றில் ஹன்சிகா - கிா்ஜிஸ்தானின் அருகே காடிா்பெக்கையும், நேஹா - மங்கோலியாவின் போலோா்துயா குரெல்குவையும் சந்திக்கின்றனா். 50 கிலோ பிரிவில் காலிறுதியில் தோற்ற நீலம், ரெபிசேஜ் சுற்று வாய்ப்பை பெற்றுள்ளாா்.
போட்டியில் இதுவரை இந்தியா 2 வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 4 தங்கம், 2 வெள்ளி

ஆதித்யா அதிரடி வெற்றி: காலிறுதிக்கு தகுதி

விஸ்வநாத், சச்சின் அசத்தல் வெற்றி

அகில இந்திய பல்கலை. கை மல்யுத்தம்: எஸ்ஆா்எம் ஒட்டுமொத்த சாம்பியன்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


