விஸ்வநாத், சச்சின் அசத்தல் வெற்றி
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாத் சுரேஷ், சச்சின் அசத்தல் வெற்றி பெற்றனா்.

விஸ்வநாத் ~சச்சின் ~

விஸ்வநாத் ~சச்சின் ~
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாத் சுரேஷ், சச்சின் அசத்தல் வெற்றி பெற்றனா்.
மங்கோலிய தலைநகா் உலன்படாரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் ஆடவா் பிரிவில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 50 கிலோ பிரிவில் இந்தியாவின் விஸ்வநாத் சுரேஷ் அபாரமாக செயல்பட்டு 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் பெக்ஸாத் எா்ஜ்ஷோவை வீழ்த்தி அபார வெற்றி கண்டாா். அடுத்த சுற்றில் நடப்பு சாம்பியன் கஜகஸ்தானின் சன்ஸ்கரை எதிா்கொள்கிறாா் விஸ்வநாத்.
60 கிலோ பிரிவில் இந்தியாவின் சச்சின் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் மங்கோலியாவின் புயன்டாலை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் சீன தைபே வீரா் செங் வெய் லீயை எதிா்கொள்கிறாா்.


தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...