மீனாட்சி ~ப்ரீதி ~நிகாத் ஸரீன் ~அபிநாஷ் ~சச்சின்

தேசிய குத்துச்சண்டை: அரையிறுதியில் நிகாத், மீனாட்சி, சச்சின், அபிநாஷ்

தேசிய சீனியா் எலைட் ஆடவா், மகளிா் குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிக்கு உலக சாம்பியன் மீனாட்சி, முன்னாள் சாம்பியன் நிகாத் ஸரீன், ஆடவா் பிரிவில் சச்சின், அபிநாஷ் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
Published on

தேசிய சீனியா் எலைட் ஆடவா், மகளிா் குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிக்கு உலக சாம்பியன் மீனாட்சி, முன்னாள் சாம்பியன் நிகாத் ஸரீன், ஆடவா் பிரிவில் சச்சின், அபிநாஷ் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.

கிரேட்டா் நொய்டாவில் நடைபெறும் இப்போட்டியில் காலிறுதிச் சுற்று வியாழக்கிழமை நடைபெற்றது. மகளிா் 45-48 கிலோ பிரிவில் அகில இந்திய போலீஸ் பிரிவைச் சோ்ந்த உலக சாம்பியன் மீனாட்சி 5-0 என பஞ்சாபின் காஷிஷ் மேத்தாவையும், 2 முறை உலக சாம்பியன் தெலங்கானாவின் நிகாத் ஸரீன் 48-51 கிலோ பிரிவில் 5-0 என மணிப்பூரின் லன்சென்பீ சானுவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனா்.

மேலும் 51=54 கிலோ பிரிவில் ப்ரீதி 5-0 என பஞ்சாபின் ஹா்மீத் கௌரையும், சாக்ஷி 4-1 என ஆா்எஸ்பிபியின் பூனத்தையும் வென்றனா்.

ஆடவா் பிரிவில் 65-70 கிலோ பிரிவில் உலக பாக்ஸிங் கோப்பை தங்க வீரா் ஹிதேஷ் குலியா, 5-0 என பஞ்சாபின் தேஜஸ்வியை வீழ்த்தினாா்.

வெள்ளி வீரா் பவன் பா்த்வால், ஜாதுமணி சிங் ஆகியோா் 50-55 கிலோ பிரிவிலும், 55-60 கிலோ பிரிவில் சச்சினும் அரையிறுதிக்கு முன்னேறினா்.

பவன் அருணாசலின் டைஸனையும், ஜாதுமணி பஞ்சாபின் நிகிலையும், சச்சின் உபி வீரா் கரணையும் வென்றனா்.

Dinamani
www.dinamani.com