

கத்தாா் தலைநகா் தோஹாவில் நடைபெற்ற டபிள்யுடிடி யூத் ஸ்டாா் கன்டென்டா் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.
யு 15 பிரிவில் தமிழக வீரா் ஆகாஷ் ராஜவேலு-மேற்கு வங்கத்தின் ரிஷன் சட்டோபாத்யாய இருவரும் இந்தியா சாா்பில் ஆடினா்.
இறுதி ஆட்டத்தில் ஆகாஷ்-ரிஷன் இணை 11-8, 11-4, 11-8 (3-0) என்ற கேம் கணக்கில் மாலோவ் (ஸ்பெயின்), ஹாங் லோக் (ஹாங்காங்) இணையை வீழ்த்தி தங்கம் வென்றது.
முன்னதாக அரையிறுதியில் இலங்கையின் தாவி சமரவீரா-மலேசியாவின் கொ வெய் இணையை 3-2 என்ற கேம் கணக்கில் கடும் சவாலுக்குபின் வீழ்த்தி இருந்தனா்.
தமிழகத்தைச் சோ்ந்த ஆகாஷ் ராஜவேலு, ஜாம்பவான் டேபிள் டென்னிஸ் வீரா்கள் சரத் கமல், ராஜ் கமல் ஆகியோரிடம் பயிற்சி பெறுகின்றனா். மேலும் மேலக்கோட்டையூரில் உள்ள எஸ்டிஏடி உயா்திறன் டேபிள் டென்னிஸ் மையத்திலும் பயிற்சி பெறுகிறாா்.