பிரேஸில் கால்பந்து அணி முதல்முறையாக உலகக் கோப்பை வென்றபோது (1958), அதன் நட்சத்திர வீரர் பீலே அணிந்திருந்த ஜெர்ஸி (எண் 10), தற்போது ரூ.47 கோடிக்கு நியூயார்க்கில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனில் நடைபெற்ற அந்தப் போட்டியில் பிரேஸில் 5-2 கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்திய இறுதி ஆட்டத்தில், 17 வயது பீலே 2 கோல்கள் அடித்தார். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் கோல் அடித்த இளம் வீரர் என்ற சாதனை, இன்றளவும் அவர் வசமே உள்ளது. பீலே 2022-இல் தனது 82 வயதில் காலமானார்.
கால்பந்து உலகில் 2-ஆவது அதிகபட்ச விலைக்கு ஏலம் போன ஜெர்ஸி பீலே உடையது ஆகும். ஆர்ஜென்டீன ஜாம்பவான் டியேகோ மாரடோனாவின் 'ஹேண்ட் ஆஃப் காட்' ஜெர்ஸி கடந்த 2022-இல் ரூ.89 கோடிக்கு ஏலம் போனதே அதிகபட்சமாக இன்றளவும் நீடிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகக் கோப்பையைக் கொண்டாடும் வாட்ஸ்ஆப்! ஸ்டேட்டஸை லைக் செய்து பாருங்கள்!

வெல்லும் கொடி! உலகக் கோப்பை வென்ற ஸ்பெயின் அணியை கொண்டாடும் தவெகவினர்!
ஹாலந்த் அதிரடியில் நாா்வே அசத்தல்; பிரேஸில் அதிா்ச்சி!
மெஸ்ஸி என்னும் மாயாவி!
விடியோக்கள்

முதல்வரின் தீர்மானத்தை எதிர்க்கிறோம்! ஆனால் இதை ஆதரிக்கிறோம்! | EPS | ADMK | TVK


