நார்வே செஸ் தொடரை முதல்முறையாக வென்று வரலாறு படைத்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு உலகின் நம்.1 வீரர் மாகன்ஸ் கார்ல்சென், “பிரக்ஞானந்தா நம்பமுடியாத ஒரு போராளி...” எனக் கூறியுள்ளார்.
மிகுந்த சுவார்சியமாகச் சென்ற நார்வே செஸ் போட்டி இறுதிச் சுற்றில் பிரக்ஞானந்தா 32 நகர்த்தலில் வின்சென்ட் கெய்மரை வீழ்த்தி 18 புள்ளிகளுடன் முதல் இந்தியராக இந்தப் பட்டம் வென்றார்.
முதலிடத்தில் நீடித்த வெஸ்லி ஸோ கடைசி சுற்று ஆட்டத்தில் டிராவில் முடிந்ததால், பிரக்ஞானந்தா கோப்பை வெல்ல ஏதுவாக அமைந்தது.
பெரிதும் எதிர்பார்த்த கார்ல்சென் இந்தத் தொடரில் நான்காவது இடத்தில் நிறைவு செய்தார். சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா குறித்து கூறியிருப்பதாவது:
பிரக்ஞானந்தா கடைசியாக நான்கு கிளாசிக்கல் போட்டிகளில் வென்றுள்ளார். இது மிகவும் பித்துப் பிடித்த நிலை. கிளட்ச் என்பது இப்படித்தான் இருக்கும். பிரக்ஞானந்தா நம்பமுடியாத ஒரு போராளி. அதற்காக அவர் பரிசு பெறுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
இந்தத் தொடரில் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வென்ற பிரக்ஞானந்தா கிளாசிக்கல் கேமில் கார்ல்செனை இருமுறை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Summary
Praggnanandhaa is an incredible fighter! after Norway chess champions Carlsen heaps praise!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரக்ஞானந்தா வரலாற்றுச் சாதனை! நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்!

நார்வே செஸ்: குகேஷை வீழ்த்திய பிரக்ஞானந்தா..! பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு!







