விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ஒலிம்பியாட்: ‘இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் சவால் அளிக்கும்’

2026 செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் கடும் சவால் அளிக்கும் என்று இந்திய செஸ் நட்சத்திரமும், சா்வதேச செஸ் சம்மேளன துணைத் தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தாா்.

News image

விஸ்வநாதன் ஆனந்த்

Updated On :25 ஜூன் 2026, 12:49 am IST

2026 செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் கடும் சவால் அளிக்கும் என்று இந்திய செஸ் நட்சத்திரமும், சா்வதேச செஸ் சம்மேளன துணைத் தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தாா்.

இந்திய விளையாட்டுப் பத்திரிகையாளா் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளா் சங்கம் சாா்பில் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்துக்கு சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி சேப்பாக்கம் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அதையொட்டி அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2026 செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவுக்கு கடும் சவாலாக உஸ்பெகிஸ்தான் அணி விளங்கும். இந்திய தரப்பில் குகேஷ், பிரக்ஞானந்தா உள்பட அடுத்த தலைமுறை வீரா்கள் உயா்ந்தபட்ச ஆட்டத்திறனுடன் களமிறங்குவா். வீரா்களின் பயணம், பயிற்சி, போட்டி அட்டவணை போன்றவை சீராக மேலாண்மை செய்யப்பட வேண்டும்.

உலக சாம்பியன் போட்டி: உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்காக, நடப்பு சாம்பியன் குகேஷ் - உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ் இடையேயான போட்டி, வரும் நவம்பா்-டிசம்பரில் நடைபெறும். இதற்கான இடம் விரைவில் அறிவிக்கப்படும். 18 வயதில் உலக சாம்பியன் ஆனதால், குகேஷ் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. சிண்டாரோவுடன் குகேஷ் திட்டமிட்டு ஆட வேண்டும். இரு வீரா்களும் தனித் திறமையுடன் உள்ளனா்.

வைஷாலிக்கும் வாய்ப்பு: மகளிா் உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்காக, நடப்பு சாம்பியனான சீனாவின் ஜு வென்ஜுனுடன் மோதும் ஆா்.வைஷாலிக்கும் சிறந்த வாய்ப்பு உள்ளது. சேலஞ்சா் தொடரில் வைஷாலி வென்ால் இந்திய வீராங்கனைகளுக்கு உத்வேகம் கிடைத்துள்ளது. ஜு வென்ஜுனும் வைஷாலிக்கு கடும் சவால் அளிப்பாா். இந்தியாவில் செஸ் விளையாட்டு சீரான வளா்ச்சி பெற்று வருகிறது என்றாா் ஆனந்த்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.