தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புவிநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல்கள்..! டிராவில் முடித்த 2 அணிகளுமே நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வு!

பார்வையாளர்களை கோல்கள் மழையில் நனைந்த அல்ஜீரியா - ஆஸ்திரியா ஆட்டம் குறித்து...

Austria's players celebrates after Austria's Sasa Kalajdzic (14) scored to tie the match during the World Cup Group J soccer match between Algeria and Austria in Kansas City, Mo., Saturday, June 27, 2026. (AP Photo/Reed Hoffmann)

வெற்றிக் களிப்பில் ஆஸ்திரியா வீரர்கள். - படம்: ஏபி

Published On :

அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டியில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையின் லீக் சுற்றில் ஆஸ்திரியா - அல்ஜீரியா அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் 3 -3 கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது. குரூப் ஜேவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரியா - அல்ஜீரியா ஆகிய இரண்டு அணிகளுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி அசத்தின.

கான்சாஸ் சிட்டியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆஸ்டிரியா 28, 55ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தது. அதேமாதிரி அல்ஜீரியாவும் 45, 60ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தது. 2-2 என சமனில் முடித்தது.

ஸ்டாப்பேஜ் நேரத்தில் 90+3ஆவது நிமிஷத்தில் அல்ஜீரியாவின் ரியாத் மஹ்ரெஸ் கோல் அடிக்க, 90+6ஆவது நிமிஷத்தில் ஆஸ்திரியாவின் சாசா கலாட்ஜிக் கோல் அடித்து 3-3 என சமன்படுத்தினார்கள்.

ஆஸ்திரியா கடைசி நிமிஷத்தில் கோல் அடிக்காவிட்டால், அந்த அணி வெளியேறியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 90+6ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்தது.

இந்தப் போட்டியை 69,045 பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தார்கள். 1982க்குப் பிறகு ஆஸ்திரியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்ததால் ஆஸ்திரியா இரண்டாம் இடமும் அல்ஜீரியா மூன்றாமிடம் பிடித்தன. இரண்டு அணிகளில் ஏதாவது ஒன்று வென்றிருந்தால் ஈரான் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Austria, Algeria trade goals in stoppage time, both advance at World Cup with stunning 3-3 draw

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.