யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பில்லீ ஜீன் கிங் டென்னிஸ்: இந்​திய அணி​யில் வைஷ்​ணவி

​பில்லீ ஜீன் கிங் கோப்பை மக​ளிா் டென்​னிஸ் போட்டி​யில், ஆசி​யா/​ஓ​சி​யா​னியா குரூப் 1 டையில் விைள​யா​டு​வ​தற்​கான இந்​திய அணி செவ்​வாய்க்​கி​ழமை அறி​விக்​கப்​பட்​டது.

News image
Updated On :3 மார்ச் 2026, 10:56 pm

தினமணி செய்திச் சேவை

​பில்லீ ஜீன் கிங் கோப்பை மக​ளிா் டென்​னிஸ் போட்டி​யில், ஆசி​யா/​ஓ​சி​யா​னியா குரூப் 1 டையில் விைள​யா​டு​வ​தற்​கான இந்​திய அணி செவ்​வாய்க்​கி​ழமை அறி​விக்​கப்​பட்​டது.

இதில் வைஷ்​ணவி அத்​கா், சஹஜா யம​ல​பள்ளி, ஸ்ரீவள்ளி பாமி​டி​பதி, ருதுஜா போசலே, அங்​கிதா ரெய்னா ஆகி​ேயாா் சோ்க்​கப்​பட்​டுள்​ள​னா். வைேதகி சௌதரி ரிசா்வ் வீராங்​க​ைன​யாக இைணந்​தி​ருக்​கி​றாா்.

விஷால் உப்​பல் கேப்​ட​னா​க​வும், ராதிகா கனித்​கா் பயிற்​சி​யா​ள​ரா​க​வும் இந்த அணிக்கு நிய​மிக்​கப்​பட்​டுள்​ள​னா். ஏப்​ரல் 6-ஆம் தேதி முதல் தில்​லி​யில் நைட​ெப​ற​வுள்ள ஆசி​யா/​ஓ​சி​யா​னியா டைக்கு முன்​பாக, இந்த அணி ஒரு வாரம் பயிற்​சி​யில் ஈடு​ப​ட​வுள்​ளது.

பெங்​க​ளூ​ரில் கடந்த மாதம் நைட​ெபற்ற ஐடி​எஃப் டென்​னிஸ் போட்டி​யில் இறு​திச்​சுற்று வரை வந்த வைஷ்​ணவி, டபிள்யூ 100 போட்டி​யில் சானியா மிா்​ஸா​வுக்​குப் பிறகு இறு​திக்கு முன்​ேன​றிய முதல் இந்​திய வீராங்​கனை என்ற பெரு​ைம​ையப் பெற்​றி​ருந்​தாா்.

அதற்கு முன் 2024-இல் டபிள்யூ15 போட்டி​யில் பட்டம் வென்​றி​ருந்​தாா். நிைல​யான முன்​ேனற்​றத்​தின் அடிப்​ப​ைட​யில் அவா் இந்த அணி​யில் சோ்க்​கப்​பட்​டுள்​ளாா்.

கடந்த மாதம் பெங்​க​ளூ​ரில் நைட​ெபற்ற பில்லீ ஜீன் கிங் கோப்பை போட்டி​யின் பிேள-​ஆஃப் கட்டத்​தில், நெதா்​லாந்து மற்​றும் ஸ்ேலா​ேவ​னி​யா​வி​டம் தோல்வி கண்​ட​தன் அடிப்​ப​ைட​யில், இந்​திய அணி 2026 சீச​னில் ஆசி​யா/​ஓ​சி​யா​னியா குரூப் 1-இல் இருந்து தொடங்​கு​கி​றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.