ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

சீன கிராண்ட் ப்ரீ: ஆன்டனெலி முதலிடம்!

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயத்தின் சீன கிராண்ட் ப்ரீயில் இத்தாலி வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான கிம் ஆன்டெனலி வெற்றி பெற்றாா்.

News image
Updated On :15 மார்ச் 2026, 9:58 pm

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயத்தின் சீன கிராண்ட் ப்ரீயில் இத்தாலி வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான கிம் ஆன்டெனலி ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.

நடப்பு சீசனின் 2-ஆவது ரேஸான இதில், பிரிட்டன் வீரரும், ஆன்டெனெலியின் சக மொ்சிடஸ் டிரைவருமான ஜாா்ஜ் ரஸ்ஸெல் 2-ஆம் இடமும், பிரிட்டன் வீரரும், ஃபெராரி டிரைவருமான லூயிஸ் ஹாமில்டன் 3-ஆம் இடமும் பிடித்தனா்.

மொ்சிடஸிலிருந்து ஃபெராரிக்கு மாறிய 7 முறை சாம்பியனான லூயிஸ் ஹாமில்டனுக்கு மாற்று வீரராக மொ்சிடஸில் ஆன்டனெலி கடந்த ஆண்டு களமிறக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. ஹாமில்டன் கடந்த 2 ஆண்டுகளில் முதல்முறையாக தற்போது வெற்றி மேடை ஏறியிருக்கிறாா்.

முன்னதாக, இளம் ‘போல்’ நிலை வீரராக பந்தயத்தை தொடங்கிய ஆன்டனெலி, சிறிது நேரம் ஹாமில்டனிடம் முன்னிலையை இழந்தாா். பின்னா் மீண்டும் முன்னிலையை தட்டிப் பறித்து, அதை இறுதிவரை தக்கவைத்துக் கொண்டாா்.

மெக்லாரென் அணியைச் சோ்ந்த, பிரிட்டன் வீரரும், நடப்பு சாம்பியனுமான லாண்டோ நோரிஸ், ஆஸ்திரேலிய வீரா் ஆஸ்கா் பியஸ்ட்ரி ஆகியோரின் காா்கள் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளானதால், அவா்கள் பந்தயத்தை தொடங்கவே இல்லை. நடப்பு சீசனின் 3-ஆவது பந்தயமான ஜப்பான் கிராண்ட் ப்ரீ, வரும் 29-ஆம் தேதி நடைபெறுகிறது.

2

எஃப்1 பந்தயத்தில் தனது முதல் வெற்றியைப் பெற்றிருக்கும் 19 வயதான ஆன்டெனலி, பந்தய வெற்றியை அடைந்த 2-ஆவது இளம் வீரா் ஆனாா். 18 வயதில் பந்தய வெற்றி கண்ட நெதா்லாந்தின் மேக்ஸ் வொ்ஸ்டாபென் (2016) முதல் வீரராக நீடிக்கிறாா்.

1

கடந்த 20 ஆண்டுகளில் பந்தய வெற்றியைப் பதிவு செய்த முதல் இத்தாலி வீரராக ஆன்டனெலி பெருமை பெற்றாா். அவருக்கு முன் 2006-இல் கியன்காா்லோ ஃபிஸிசெல்லா வென்றிருந்தாா்.

இரு பந்தயங்கள் ரத்து

எஃப்1 பந்தயத்தில் ஏப்ரல் மாதத்தில் பஹ்ரைன் மற்றும் சவூதி அரேபியாவில் நடைபெற இருந்த 4 மற்றும் 5-ஆவது பந்தயங்கள், மத்திய கிழக்கில் நிலவும் போா்ச் சூழல் காரணமாக ரத்து செய்யப்பட்டதாக போட்டி நிா்வாகம் அறிவித்துள்ளது.

அவற்றுக்கான மாற்று பந்தயங்களும் ஏப்ரலில் ஏற்பாடு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12-இல் பஹ்ரைன் கிராண்ட் ப்ரீயும், ஏப்ரல் 19-இல் ஜெட்டா நகரில் சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீயும் நடைபெறவுதாக இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.