நடப்பு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக மிட்செல் சாண்ட்னர் விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக கேசவ் மகாராஜ் மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 23) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நடந்த போட்டியில் தனது இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2026 தொடரிலிருந்து மிட்செல் சாண்ட்னர் விலகினார்.
இதனையடுத்து, சாண்ட்னருக்குப் பதிலாக, தென்னாப்பிரிக்க இடது கை சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மகாராஜை ஒப்பந்தம் செய்துள்ளதை மும்பை இந்தியன்ஸ் அணி உறுதி செய்துள்ளது.
மகாராஜ், அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தென்னாப்பிரிக்காவின் மிகவும் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர்.
மேலும், சர்வதேச அளவில் ஒரு டி20 போட்டியில்கூட விளையாடாமல் நேரடியாக 2021 ஆம் ஆண்டுக்கான தென்னாப்பிரிக்காவின் டி20 உலகக் கோப்பை அணியில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கைக்கு எதிராக கேப்டனாக அறிமுகமானார்.
தனது கடைசி 30 டி20 போட்டிகளில், 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிலும் சிறப்பாக ஒரே ஆட்டத்தில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்த பெருமையையும் பெற்றுள்ளார்.
இதனிடையே, சாண்ட்னர் முழுமையாக குணமடைய மும்பை இந்தியன்ஸ் அணி வாழ்த்துவதோடு, அவர் விரைவில் மீண்டும் களத்தில் திரும்புவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
Summary
With Mitchell Santner ruled out of the ongoing IPL season due to injury, the Mumbai Indians have signed Keshav Maharaj as his replacement.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடப்பு ஐபிஎல் சீசன் பாதியிலேயே மும்பை அணியிலிருந்து விலக முடிவெடுத்த ஹார்திக் பாண்டியா?
மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு; கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா!

ஐபிஎல் 2026: மும்பை இந்தியன்ஸ் அணியில் ஓரங்கட்டப்படும் ஹார்திக் பாண்டியா?








