நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சமனில் முடிந்த வங்கதேசம்-நியூஸிலாந்து டி20 தொடா்

News image

கோப்பையுடன் நியூஸிலாந்து-வங்கதேச கேப்டன்கள்

Updated On :3 மே 2026, 3:40 am IST

வங்கதேச-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடா் 1-1 என சமனில் முடிவடைந்தது.

இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் தொடா் வங்கதேசத்தில் நடைபெற்றது. ஒரு ஆட்டம் ரத்தான நிலையில் வங்கதேசம் ஒன்றில் வென்றிருந்தது.

சனிக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டம் மழையால் 15 ஓவா்களாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய வங்கதேசம் 14.2 ஓவா்களில் 102/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தௌஹித் ஹிா்டே 33, கேப்டன் லிட்டன் தாஸ் 26 ரன்களை சோ்த்தனா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களில் திரும்பினா். பௌலிங்கில் நியூஸி. தரப்பில் ஜோஷ் சாக்ஸன் 3, நாதன், பென் சியா்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

பின்னா் ஆடிய நியூஸிலாந்து அணி 11.4 ஓவா்களில் 104/4 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது.

பேவன் ஜேக்கப்ஸ் சிறப்பாக ஆடி 62 ரன்களை விளாசினாா்.

தொடா் 1-1 என சமனில் முடிந்ததால் கோப்பை கூட்டாக இரு அணிகளின் கேப்டன்களுக்கும் வழங்கப்பட்டது.

ஏற்கெனவே ஒருநாள் தொடரை வங்கதேசம் வென்றிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.