முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ராஜஸ்தான் ராயல்ஸை கையகப்படுத்திய மிட்டல் குடும்பம், அதார் பூனாவாலா: மதிப்பு ரூ. 15,600 கோடி!

News image
Updated On :4 மே 2026, 5:45 am IST

புது தில்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெருவாரியான பங்குகளை, இந்திய தொழிலதிபர்களான லக்ஷ்மி என். மிட்டல், அவர் மகன் ஆதித்யா மிட்டல், அதார் பூனாவாலா ஆகியோர் இணைந்து ரூ.15,600 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளனர்.

முன்னதாக அந்த அணியை, அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் கால் சோமானி, வால்மார்ட் குழுமைத்தைச் சேர்ந்த ராப் வால்டன், ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் உரிமையாளரான ஹம்ப் குடும்பத்தினர் இணைந்த கூட்டமைப்பு ரூ.15,290

கோடிக்கு வாங்குவதாக இருந்தது.

பல்வேறு காரணங்களால் அது நிகழாமல் போனதையடுத்து, தற்போது லக்ஷ்மி என்.மிட்டல், அவர் மகன் ஆதித்யா மிட்டல், அதார் பூனாவாலா ஆகியோர் கூட்டாக, ராஜஸ்தான் அணியின் 75 சதவீத பங்குகளை வாங்கியுள்ளனர்.

இந்த ஒப்பந்த மதிப்பானது, ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ், கரீபியன் பிரீமியர் லீக் அணியான பார்படோஸ் ராயல்ஸ், எஸ்ஏ20 அணியான பார்ல் ராயல்ஸ் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும். பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாக கவுன்சில் உள்ளிட்டவை ஒப்புதல் வழங்கவேண்டியுள்ளதால், நடப்பாண்டின் 3}ஆவது காலாண்டில் இந்த உரிமையாளர் மாற்றம் நிறைவடையும் எனத் தெரிகிறது.

ராஜஸ்தான் அணியின் 75 சதவீத பங்குகள் மிட்டல் குடும்பத்திடமும், 18 சதவீத பங்குகள் பூனாவாலாவிடமும் இருக்கும் நிலையில், எஞ்சிய 7 சதவீத பங்குகள், மனோஜ் பதாலே உள்ளிட்ட முந்தைய முதலீட்டாளர்கள் வசம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.