தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

‘ஏ’ அணிகள் இடையேயான டெஸ்ட்: இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

News image

ஆஸ்திரேலியா ஏ அணி. - படம்: எக்ஸ் / கிரிக்கெட் ஆஸ்திரேலியா

Updated On :8 மே 2026, 7:45 am IST

இந்திய ஆடவர் "ஏ' அணி வரும் செப்டம்பர் - அக்டோபரில் ஆஸ்திரேலிய "ஏ' அணியுடன் 2 நான்கு நாள் டெஸ்ட்டுகளிலும், 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடவுள்ளது.

பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த "ஏ' அணிகள் இடையேயான ஆட்டங்கள் யாவும் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 11 வரை புதுச்சேரியில் நடைபெறவுள்ளன.

இதில் முதல் டெஸ்ட் செப்டம்பர் 22 முதல் 25 வரையும், 2}ஆவது டெஸ்ட் 29 முதல் அக்டோபர் 2 வரையும் நடைபெறவுள்ளன. 50 ஓவர்கள் கொண்ட லிஸ்ட் ஏ ஆட்டங்கள் மூன்றும் அக்டோபர் 6, 9, 11 ஆகிய நாள்களில் விளையாடப்படவுள்ளன.

இதனிடையே, ஜிம்பாப்வே மகளிர் அணியும் அக்டோபர் 16 முதல் 28 வரை இந்திய மகளிர் அணியுடன் விளையாடவுள்ளது. இதில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ராய்பூரிலும், அதே எண்ணிக்கையிலான ஆட்டங்கள் அடங்கிய ஒருநாள் தொடர் பரோடாவிலும் நடைபெறுகின்றன.

இந்திய மகளிர் "ஏ' அணியும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த மகளிர் "ஏ' அணிகளுடன் விளையாடவுள்ளது. இரு அணிகளுடனுமே 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களுடன் ஒரு 4 நாள் டெஸ்ட்டிலும் இந்திய மகளிர் "ஏ' அணி களம் காணவுள்ளது.

இதில் ஆஸ்திரேலிய மகளிர் "ஏ' அணியுடனான தொடர்கள் மொஹாலி, தர்மசாலாவில் செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 2 வரையும், இங்கிலாந்து மகளிர் "ஏ' அணியுடனான தொடர்கள் புணே மற்றும் நவி மும்பையில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 22 வரையும் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.