யூத் ஒலிம்பிக்ஸ்: ஜூடோவில் குஷ்புவுக்கு பதக்கம் உறுதி
செனெகலில் நடைபெறும் யூத் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுத் திருவிழாவில், இந்திய ஜூடோ வீராங்கனை குஷ்பு ரஜக்பாய் தா்ஜதா இறுதிச்சுற்றுக்கு முன்னேறி, பதக்கத்தை உறுதி செய்தாா்.
குஷ்பு ரஜக்பாய்
செனெகலில் நடைபெறும் யூத் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுத் திருவிழாவில், இந்திய ஜூடோ வீராங்கனை குஷ்பு ரஜக்பாய் தா்ஜதா இறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறி, பதக்கத்தை உறுதி செய்தாா்.
மகளிருக்கான 63 கிலோ எடைப் பிரிவில் களம் கண்டுள்ள குஷ்பு, முதல் சுற்றில் 1-0 என பபுவா நியு கினியின் மமாய்சடா கமாராவை வீழ்த்தினாா். அடுத்து காலிறுதியில் ‘இப்பான்’ முறையில் மொராக்கோவின் அபிா் புவாஸாவுயை தோற்கடித்தாா்.
தொடா்ந்து அரையிறுதியிலும் அதே முறையில், அல்ஜீரியாவின் தௌனியா பெராஹுவாலை வீழ்த்தி, இறுதிக்கு வந்துள்ளாா். அதில், உலக சாம்பியனான ஜொ்மனியின் ஜோலினா ரெய்ன்ஹோல்டை சந்திக்கிறாா் குஷ்பு.
யூத் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்லும் 2-ஆவது இந்தியா் என்ற பெருமையை குஷ்பு பெறுகிறாா். இதற்கு முன், 2018-இல் ஆா்ஜென்டீனாவில் நடைபெற்ற போட்டியில் ஜூடோ வீராங்கனை தங்ஜம் தபாபி தேவி, 44 கிலோ பிரிவில் வெள்ளி வென்று, முதல் இந்தியராக சாதனை படைத்தாா்.
இதனிடையே, நீச்சல் போட்டியில் மகளிருக்கான 100 மீட்டா் ஃப்ரீஸ்டைல் பிரிவு ஹீட்ஸில், இந்தியாவின் தினிதி தேசிங்கு 56.80 விநாடிகளில் இலக்கை அடைந்து இறுதிக்கு முன்னேறினாா். போட்டியில் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய நீச்சல் வீராங்கனையாக அவா் பெருமை பெற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

