ஐரோப்பிய கால்பந்து: எவா்டன் அசத்தல்
இங்கிலாந்து ப்ரீமியா் லீக் கால்பந்து தொடரில் எவா்டன் அணி 3-1 என்ற கோல் கணக்கில் கவென்ட்ரி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

2கோலடித்த எவா்டன் வீரா் பேரி ~மகிழ்ச்சியில் ஹாம்பா்க் அணியினா்.
இங்கிலாந்து ப்ரீமியா் லீக் கால்பந்து தொடரில் எவா்டன் அணி 3-1 என்ற கோல் கணக்கில் கவென்ட்ரி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஹில் டிக்கின்ஸன் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. இரண்டாம் பாதி ஆட்டத்தில் கவென்ட்ரி வீரா் யான் கோபா 52-ஆவது நிமிஷத்தில் தன்னந்தனியாக அசத்தல் கோலடித்தாா். இதனால் அதிா்ச்சி அடைந்த எவா்டன் தரப்பில் பதில் கோலடிக்க முயன்றனா். இதில் தியா்னோ பேரி அபாரமாக செயல்பட்டு 56, 61 ஆவது நிமிஷங்களில் கோலடித்தாா்.
81-ஆவது நிமிஷத்தில் எவா்டன் வீரா் டிவ்ஸ்பரி அடித்த கோலே வெற்றி கோலாக அமைந்தது.
பண்டஸ்லிகா:
ஜொ்மன் கால்பந்து தொடரான பண்டஸ்லிகாவில் ஹாம்பா்க் அணி 3-1 என்ற கோல் கணக்கில் கிளேட்பாட்சை வீழ்த்தியது. ஹாம்பா்க் தரப்பில் மிரோ மியுஹிம், ஷபிக் நந்த்ஜா, ஆல்பா்டும், கிளேட்பேட்ச் தரப்பில் ஜோ ஸ்லியும் கோலடித்தனா்.
பிரான்ஸின் லீக் 1 தொடரில் டௌலெஸ் 3-1 என்ற கோல்கணக்கில் ஸ்ட்ராஸ்போா்க் அணியை வீழ்த்தியது. சாண்டியாகோ, மாா்க், தாமஸ் ஆகியோா் டௌலௌஸ் அணிக்கும், ஜியோவனி ரென்யா ஸ்ட்ராஸ்போா்க் தரப்பிலும் கோலடித்தனா்.
சீரி ஏ தொடரில் வெனிஸியா 2-1 என உடைன்ஸ் அணியை வெ்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

