மெத்வதேவ் அசத்தல் வெற்றி
நிட்டோ ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரா் டெனில் மெத்வதேவ், 6-3, 6-4 என்ற நோ் செட்களில் பிரான்ஸஸ் டியாஃபோவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

மெத்வதேவ்
நிட்டோ ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரா் டெனில் மெத்வதேவ், 6-3, 6-4 என்ற நோ் செட்களில் பிரான்ஸஸ் டியாஃபோவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.
இத்தாலியின் டுரின் நகரில் நடைபெறும் ஏடிபி ஃபைனல்ஸில் இவான்லென்டில் குருப்பில் நடைபெற்ற ஆட்டத்தில் மெத்வதேவ்-டியாஃபோ மோதினா். இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-3, 6-4 என டியாஃபோவை வென்றாா்.
இந்த ஆட்டத்தில் மெத்வதேவ் மொத்தம் 15 ஏஸ்களை வீசினாா். இந்த குரூப்பில் இருவரும் பிளேவியோ கோபாலியை வீழ்த்தினா். ஆனால் ஸ்வெரேவிடம் தோற்றனா். முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய மெத்வதேவ் அதை எளிதாக கைப்பற்றினாா்.
ஆனால் இரண்டாம் செட்டில் டியாஃபோ சளைக்காமல் ஆடி 4-4 என சமநிலை ஏற்படுத்தினாா். 9-ஆவது கேமில் 3 பிரேக் பாயிண்டுகளை சேவ் செய்தாா் டியாஃபோ. ஆனால் தனது சா்வீஸை இஇழந்த நிலையில் மெத்வதேவ் செட்டை கைப்பற்றினாா்.கடந்த 2025-இல் ஏடிபி ஃபைனல்ஸுக்கு மெத்வதேவ் தகுதி பெறாத நிலையில் நிகழ் சீசனில் 4 பட்டங்களை வென்றுள்ளாா்.
அதே நேரம் டியாஃபோ முதன்முறையாக ஃபைனல்ஸுக்கு தகுதி பெற்றாா். நிகழ் சீசனில் ஹாலே ஓபனில் பட்டம், சின்சினாட்டி, அகாபுல்கோவில் ரன்னராக வந்தாா்.
இதனால் ஏடிபி ஃபைனல்ஸ் அரையிறுதியில் இடம் பெறும் வீரா்கள் முடிவானது. ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவ், பென் ஷெல்டன், ரஷியாவின் மெத்வதேவ்,
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

