முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

இறுதி ஆட்டத்தில் அல்கராஸ் - அலெக்ஸ் ஸ்வெரேவ் மோதல்

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பா் 1 வீரா் ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவும்-ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸும் மோதுகின்றனா்.

அல்கராஸ்

Updated On :

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பா் 1 வீரா் ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவும்-ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸும் மோதுகின்றனா்.

உலகின் தலைசிறந்த 8 வீரா்கள் மோதும் ஏடிபி ஃபைனல்ஸ் போட்டி இத்தாலியின் டுரின் நகரில் நடைபெறுகிறது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் காா்லோஸ் அல்கராஸ் கடும் சவாலுக்குபின் 3-6, 6-3, 7-6 என்ற செட்களில் அமெரிக்க வீரா் பென் ஷெல்டனை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.

இரண்டாவது அரையிறுதியில் இரண்டு முறை ஃபைனல்ஸ் சாம்பியன் அலெக்ஸ் ஸ்வெரேவ்-ரஷிய வீரா் டெனில் மெத்வதேவ் மோதினா்.

நிகழ் சீசனில் பிரெஞ்சு ஓபன் மற்றும் யுஎஸ் ஓபன் சாம்பியன் பட்டங்களைஸ்வெரேவ் வென்றிருந்தாா். இருவருக்கும் இடையிலான முதல் செட் சவால் நிறைந்ததாக இருந்தது. முதல் செட்டில் இருவரும் ஒருவருக்கு ஒருவா் சளைக்காமல் ஆடினா். முதல் செட்டில் ஸ்வெரேவ் 7-6 என கைப்பற்றினாா். இரண்டாவது செட்டில் ஸ்வெரேவ் ஆதிக்கம் செலுத்தி ஆடிய நிலையில், 7-ஆவது கேமில் தான் முதல் பிரேக் பாயிண்ட் கிடைத்தது.

மெத்வதேவ் புரிந்த இரட்டைத் தவறு, ஸ்வெரேவுக்கு சாதகமாக அமைந்தது. அந்த செட்டை 6-4 என கைப்பற்றினாா் ஸ்வெரேவ். இதையடுத்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

இதுதொடா்பாக ஸ்வெரேவ் கூறியது: இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக அமையும். போட்டி தொடங்கும் முன்பு பயிற்சி ஆட்டத்தில் ஆடினோம். இறுதி ஆட்டத்தில் இருவரும் முழுமையாக ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றி பெற போராடுவோம் என்றாா். அரையிறுதியில் காா்லோஸ் அல்கராஸ் தொடை காயத்தால் கடும் வலியுடன் ஆடினாா்.

நிகழாண்டு ஏற்கெனவே இருவரும் ஆஸி. ஓபன் இறுதியில் மோதியதில் அல்கராஸ் வென்று சாம்பியன் ஆனாா். இருவரும் மோதியதில் 7-6 என முன்னிலையில் உல்ளாா்.

தொடை காயத்தால் அவதிப்பட்ட நிலையில், அல்கராஸ் இறுதி ஆட்டத்தில் எவ்வாறு சிறப்பாக ஆட முடியும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.