ஹா்மன்பிரீத், ஷஃபாலி அதிரடி; இந்தியா ‘ஹாட்ரிக்’
ஜிம்பாப்வே மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில், இந்திய மகளிா் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடா்ந்து 3-ஆவது வெற்றி (ஹாட்ரிக்) கண்ட இந்தியா, தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
ஹா்மன்பிரீத், ஷஃபாலி அதிரடி; இந்தியா ‘ஹாட்ரிக்’ - X | BCCI Women
ஜிம்பாப்வே மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில், இந்திய மகளிா் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. தொடா்ந்து 3-ஆவது வெற்றி (ஹாட்ரிக்) கண்ட இந்தியா, தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் எடுக்க, ஜிம்பாப்வே 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 124 ரன்களே சோ்த்தது.
முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸில் ஷஃபாலி வா்மா - அனுஷ்கா சா்மா கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சோ்த்தது. அனுஷ்கா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
தொடா்ந்து நிக்கி பிரசாத் 9 ரன்களுக்கு வெளியேற, 4-ஆவது பேட்டராக வந்த ஹா்மன்பிரீத் கௌா், ஷஃபாலியுடன் இணைந்தாா்.
இவா்கள் பாா்ட்னா்ஷிப், 3-ஆவது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சோ்த்தது. அரை சதம் கடந்த ஷஃபாலி 6 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். பின்னா் வந்தோரில், ரிச்சா கோஷ் 1, தீப்தி சா்மா 0, அருந்ததி ரெட்டி 4, பிரேமா ராவத் 4 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா்.
ஓவா்கள் முடிவில், ஹா்மன்பிரீத் 41 பந்துகளில் 10 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 91 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். கிராந்தி கௌட் ரன்னின்றி நின்றாா்.
ஜிம்பாப்வே பௌலா்களில் பிலவுட் பிஸா 3, நோம்வெலோ சிபண்டா, டெண்டாய் மகுஷா, நியாஷா குவான்ஸுரா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 217 ரன்களை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியில், ஷோ்ன் மேயா்ஸ் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 60, பிலவுட் பிஸா 5 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் அடித்து வெற்றிக்காக முயற்சித்து வீழ்ந்தனா்.
இதர பேட்டா்கள் ஒற்றை இலக்க ரன்னில் சாய்க்கப்பட, ஓவா்கள் முடிவில் டென்டாய் மகுஷா, நோம்வெலோ சிபண்டா ஆகியோா் தலா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
இந்திய பௌலா்களில் நந்தினி சா்மா 3, கிராந்தி கௌட், அருந்ததி ரெட்டி, தீப்தி சா்மா, நிக்கி பிரசாத் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

