
கேப்டன் அமெரிக்கா உதவியால் தோல்வியில் இருந்து தப்பிய ஏசி மிலன்!
கேப்டன் அமெரிக்கா என்றழைக்கப்படும் கால்பந்து வீரர் கிறிஸ்டியன் புலிசிக் உதவியால் தோல்வியில் இருந்து தப்பிய ஏசி மிலன் குறித்து...

கிறிஸ்டியன் புலிசிக் - படங்கள்: எக்ஸ் / ஏசி மிலன்
கேப்டன் அமெரிக்கா என்றழைக்கப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியன் புலிசிக் (27 வயது) ஏசி மிலன் அணியில் விளையாடி வருகிறார். உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் விளையாடும் முதல் போட்டியிலேயே தாக்கத்தை ஏற்படுத்தினார்.
இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ தொடரில் ஏசி மிலன் - லசியோ போட்டி 2-2 என சமனில் முடிந்தது. இதில் கிறிஸ்டியன் புலிசிக் ஒரு அசிஸ்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து உலகக் கோப்பையில் அமெரிக்க அணி 1-4 என பெல்ஜியம் உடன் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் தோல்வியுற்று வெளியேறியது.
இந்தப் போட்டியில் புலிசிக் 52ஆவது நிமிஷத்தில் ஷாட் அடிக்க முயற்சித்தபோது காயம் ஏற்பட்டது. பின்னர், நொண்டிக் கொண்டிருந்த அவர் 59ஆவது நிமிஷத்தில் வெளியேறினார்.
ஸ்கேன் செய்தபோது டிபியா, ஃபைபுலா எலும்பில் உடைவு ஏற்பட்டிருந்தது கண்டறியப்ட்டது. பின்னர், குணமாகி இன்றுதான் அவர் விளையாட வந்தார். இரண்டாம் பாதியில் 46ஆவது நிமிஷத்தில் களமிறங்கினார். அப்போது ஏசி மிலன் 0-2 என பின்னிலையில் இருந்தது.
போட்டியின் 59ஆவது நிமிஷத்தில் அவருக்கு யெல்லோ கார்டு கொடுக்கப்பட்டது. 65ஆவது நிமிஷத்தில் அவர் அளித்த அசிஸ்ட் மூலமாக டியாகோ மொரேரா கோல் அடித்தார். அடுத்த சில நிமிஷங்களில் மொரேரா மற்றுமொரு கோல் அடித்து ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ரூபன் அமோரியம் தற்போது ஏசி மிலன் அணிக்குத்தான் பயிற்சியாளராக இருக்கிறார். புலிசிக் மீது அதிகமான நம்பிக்கை வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
He came. He saw. He scored twice âï¸
— AC Milan (@acmilan) September 13, 2026
Brought to you by @EnelGroupIT pic.twitter.com/FCD99p0uiC
Summary
Captain America alias Christian Pulisic helps AC Milan rally for draw in first game since World Cup
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







