இங்கிலாந்துக்கு எதிராக 189 ரன்கள் குவிப்பு: அரையிறுதிக்குள் நுழையுமா தென் ஆப்பிரிக்கா?

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக 189 ரன்கள் குவிப்பு: அரையிறுதிக்குள் நுழையுமா தென் ஆப்பிரிக்கா?


இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.

டி20 உலகக் கோப்பையின் இன்றைய (சனிக்கிழமை) 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். ஹென்ட்ரிக்ஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மொயீன் அலி சுழலில் போல்டானார். இதையடுத்து, டி காக் மற்றும் ராசி வான்டர் டூசன் பாட்னர்ஷிப்பைக் கட்டமைத்தனர்.

இந்த இணை படிப்படியாக ரன்களை உயர்த்தி பின்னர் ரன் ரேட்டையும் ஓவருக்கு 7-ஐ தாண்டி உயர்த்தினர். டி காக் 34 ரன்கள் எடுத்து அடில் ரஷித் சுழலில் சிக்கினார்.

விக்கெட் விழுந்தாலும், டூசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 37-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். எய்டன் மார்கிரமும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது.

மார்கிரம் கடைசி ஓவரில் தனது 24-வது பந்தில் அரைசதம் அடித்தார்.

கிறிஸ் ஜோர்டன் வீசிய கடைசி ஓவரில் மட்டும் இரண்டு சிக்ஸர்கள் பறக்க தென் ஆப்பிரிக்காவுக்கு 16 ரன்கள் கிடைத்தன.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டூசன் 60 பந்துகளில் 94 ரன்களும், மார்கிரம் 25 பந்துகளில் 52 ரன்களும் எடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com