'இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் தொழுகை' விவகாரம்: மன்னிப்பு கோரினார் வக்கார் யூனுஸ்

இந்திய வீரர்கள் மத்தியில் தொழுகை செய்த பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் குறித்த தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனுஸ்.
'இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் தொழுகை' விவகாரம்: மன்னிப்பு கோரினார் வக்கார் யூனுஸ்

இந்திய வீரர்கள் மத்தியில் தொழுகை செய்த பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் குறித்த தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனுஸ்.

இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராகத் தனது முதல் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான். துபை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 151/7 ரன்களை எடுத்தது. இரண்டாவதாக ஆடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17.5 ஓவர்களில் 152 ரன்களைக் குவித்து அபார வெற்றி கண்டது.

பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸில் தேநீர் இடைவேளையின்போது தொடக்க வீரர் ரிஸ்வான் மைதானத்தில் தொழுகை செய்தார். இதனை முன்வைத்து தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனுஸ் கூறியதாவது: இந்துக்கள் முன்னிலையில் ரிஸ்வான் தொழுகை (நமாஸ்) செய்துள்ளார். இது எனக்குச் சிறப்புமிக்கதாக இருந்தது என்றார். 

வக்கார் யூனுஸின் இந்தப் பேச்சுக்கு இந்திய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கண்டனம் தெரிவித்தார்கள். விளையாட்டில் மதரீதியிலான கருத்துகளை வெளிப்படுத்தியதற்காக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, வெங்கடேஷ் பிரசாத் போன்றோர் வக்கார் யூனுஸின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவும் வக்கார் யூனுஸின் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்து ட்வீட்கள் வெளியிட்டார்.

இந்நிலையில் தொலைக்காட்சியில் பேசியதற்கு மன்னிப்பு கோரியுள்ளார் வக்கார் யூனுஸ். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

பரபரப்பான தருணத்தில் நான் ஏதோ சொல்லியிருக்கிறேன். பலருடைய உணர்வுகளைப் புண்படுத்தும் அர்த்தத்தில் நான் பேசவில்லை. இதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். அந்த நோக்கத்தில் நான் பேசவில்லை. என்னுடைய தவறுதான். இனம், நிறம், மதம் வேறுபாடின்றி விளையாட்டு அனைவரையும் இணைக்கிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com