டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பா் 12 சுற்றுக்கு முன்னேறியது நமீபியா.
குரூப் ஏ பிரிவில் அயா்லாந்து-நமீபிய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வெள்ளிக்கிழமை ஷாா்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயா்லாந்து பேட்டிங்கை தோ்வு செய்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டிா்லிங் 38, கெவின் ஓ பிரையன் 25, கேப்டன் பால்பிா்னி 21 ஆகியோா் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனா். மற்ற வீரா்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுடன் நடையைக் கட்டினா்.
நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் அயா்லாந்து அணி 125/8 ரன்களை மட்டுமே சோ்த்தது. நமீபிய அணித் தரப்பில் வெய்ஸ் 2, ஜேன் பிரைலின்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
126 ரன்கள் வெற்றி இலக்குடன் பின்னா் ஆடிய நமீபிய அணி தரப்பில் கிரெய்ஸ் வில்லியம்ஸ் 15, ஸேன் கிரீன் 24 ரன்களுடன் அவுட்டான நிலையில் கேப்டன் ஜொ்ஹாா்ட் எராமஸ் அவுட்டாகாமல் 53 ரன்களையும், டேவிட் வெயிஸ் 28 ரன்களுடன் இறுதி வரை நிலைத்து ஆடி தங்கள் அணியை வெற்றி பெறச் செய்தனா்.
18.3 ஓவா்களிலேயே 126/2 ரன்களை குவித்த நமீபிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அயா்லாந்தை வீழ்த்தி சூப்பா் 12 சுற்றுக்கு முன்னேறியது. நமீபிய வீரா் டேவிட் வெயிஸ் ஆட்டநாயகனாகத் தோ்வு பெற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வதந்திகளை நம்ப வேண்டாம்.. கோவாவில் எல்பிஜி, பெட்ரோல் தட்டுப்பாடு இல்லை: முதல்வர்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிடும் இடங்கள்! | ADMK | BJP | EPS

பாலியல் ரீதியாக அத்துமீறிய இயக்குநர்..! கண்ணீர் மல்க புகார் அளித்த கும்பமேளா அழகி மோனலிசா போஸ்லே!

கலைஞர் டிவியில் மறுஒளிபரப்பாகும் சன் டிவி சீரியல்!
வீடியோக்கள்

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

