கடைசி ஓவரில் 20 ரன்கள்: இலங்கைக்கு உதவுமா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் இன்றைய (செவ்யாக்கிழமை) ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
சிறப்பான ஃபார்மில் உள்ள இலங்கை தொடக்க ஆட்டக்காரர் குசால் மெண்டிஸ் 5 ரன்களுக்கு பேட் கம்மின்ஸ் வேகத்தில் வீழ்ந்தார். இதன்பிறகு, பதும் நிசன்கா மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர்.
இந்த இணை பாட்னர்ஷிப்பை அமைத்தாலும், ரன் ரேட் குறைவாகவே இருந்தது வந்தது. ஓவருக்கு 7 ரன்களைத் தொட முடியவில்லை.
ஒரு கட்டத்துக்குப் பிறகு துரிதமாக ஆட முயற்சித்த டி சில்வா 26 ரன்களுக்கு அஷ்டன் அகார் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையும் படிக்க | ஸாம்பாவுக்கு கரோனா: இன்றைய ஆட்டத்தில் விளையாடுவாரா?
பவுண்டரிகள் கிடைக்காதபோதிலும், கள சூழலை உணர்ந்த நிசன்கா மற்றும் சாரித் அசலன்கா ஓடியே சிறப்பாக ரன்களை எடுத்து வந்தனர். இதன் விளைவாக நிசன்கா ரன் அவுட்டும் ஆனார். அவர் 45 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட முயற்சித்து சொற்ப ரன்களில் வெளியேறினர்.
சாரித் அசலன்கா மட்டும் கடைசி வரை நம்பிக்கையளித்து வந்தார். கடைசி வரை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், மிட்செல் ஸ்டார்க் 19-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் வைட் மூலமாக 5 ரன்கள் கிடைக்க, இலங்கை மொத்தம் 11 ரன் சேர்த்தது.
கடைசி ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் அசலன்கா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாச, சமிகா கருணாரத்னே பவுண்டரியுடன் இன்னிங்ஸை முடித்தார்.
இதனால், 150 ரன்கள் என்ற உளவியல் ரீதியான நல்ல ஸ்கோரை கடந்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அசலன்கா 25 பந்துகளில் 38 ரன்களும், கருணாரத்னே 7 பந்துகளில் 14 ரன்களும் விளாசினர்.
ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், அஷ்டன் அகார் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...