முதல் வெற்றியைப் பெறுமா ஆஸி.? இலங்கைக்கு எதிராக பந்துவீச்சு!
டி20 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.


டி20 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பெர்த்தில் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆடம் ஸாம்பாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருக்குப் பதில் அஷ்டன் அகார் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் பதும் நிசன்கா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்ததால், இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...