மேற்கிந்தியத் தீவுகள் தலைமைப் பயிற்சியாளர் ராஜிநாமா
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஃபில் சிம்மன்ஸ் தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஃபில் சிம்மன்ஸ் தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட தொடருடன் அவர் விலகவுள்ளதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
2012 மற்றும் 2016 என இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்ற சாம்பியன் அணி, சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறாதது அந்த நாட்டு ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. 2007-இல் டி20 உலகக் கோப்பை அறிமுகமானதிலிருந்து மேற்கிந்தியத் தீவுகள் அணி குரூப் நிலையின் அடுத்த நிலைக்கு தகுதி இருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...