விமர்சனங்களை எதிர்கொள்ளாத எவரும் வெற்றியைப் பெற முடியாது: பாக். வீரர்!

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தங்களது அணியின் மீதான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான்.
பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான்.

நடந்துமுடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வென்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்குக்கூட தேர்வாகாமல் வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் உள்பட அந்நாட்டு ரசிகள் மிகுந்த வேதனை அடைந்தார்கள்.

பாகிஸ்தான் அணியை சரமாரியாக விமர்சித்தார்கள். இந்த அணியை கலைத்துவிட வேண்டுமென கூறினார்கள்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வரும் சனிக்கிழமை வெள்ளைப் பந்து அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டியன், மூத்த அணியின் மேலாளர் வாஹாப் ரியாஸ் ஆகியோர் உடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக இருக்கிறது.

இந்தக் கூடத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் நடக்காமல் அதே மாதிரியான வீரர்களாக அணியில் எடுக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான்.
விம்பிள்டன் பதிவிட்ட ஆவேஷம் பட பாடல் வைரல்!

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர்- பேட்டரான முகமது ரிஸ்வான் பேட்டி வைரலாகி வருகிறது. முகமது ரிஸ்வான் கூறியதாவது:

எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாங்கள் இப்படி மோசமாக விளையாடியதால் இந்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ளாத எவரும் வெற்றியை பெற முடியாது.

இந்த டி20 உலகக் கோப்பையில் எங்களது செயல்பாடுகள் வருத்தமளிக்கின்றன. இந்தத் தோல்விக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு அணி தோல்வியிறும்போது, ஒருவர் பேட்டிங் அல்லது பௌலிங் மட்டும் நன்றாக விளையாடியதாக சொல்ல முடியாது.

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான்.
தாமதமாக வரவில்லை: அணியில் சேர்க்காதது குறித்து வங்கதேச வீரர் மாற்று கருத்து!

ஒரு மனிதருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அறுவைச் சிகிச்சை சாதாரணமானது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குநர் கடின உழைப்பாளி. அவர்தான் அணியில் யார் இருக்க வேண்டும் யார் இருக்கக்கூடாது என்பதை முடிவெடுக்கிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com