
டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கு மழையினால் முடிவு கிடைக்கவில்லை.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் பார்படாஸில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. மழையின் காரணமாக போட்டி தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
ஸ்காட்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்ஸே மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் களமிறங்கினர். இந்த இணை அதிரடியாக விளையாடியது. இருப்பினும், 7-வது ஓவரின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பின் நீண்ட நேரம் கழித்து ஆட்டம் தொடங்கப்பட்டது. ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஸ்காட்லாந்து அணி 10 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய ஜார்ஜ் முன்ஸே 41 ரன்களுடனும், மைக்கேல் ஜோன்ஸ் 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணிக்கு 10 ஓவர்களில் 109 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மழை காரணமாக போட்டியை நடத்த முடியவில்லை. போட்டிக்கு முடிவு கிடைக்காததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.