
சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று நடைபெற்ற தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி டி20 உலகக் கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி. நேற்றையப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 37 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.
அயர்லாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் 52 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை ரோஹித் சர்மா படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவருக்கு முன்னதாக சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலி இந்திய அணிக்காக 4 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார்.
மூன்று வடிவிலான (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சர்வதேசப் போட்டிகளிலும் 4 ஆயிரம் ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள் என்ற பெருமையை ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.