
மெதுவான ஆடுகளங்களும் குறைந்தபட்ச ஸ்கோர்களும் நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரின் கருப்பொருளாக இருப்பது போல் தெரிகிறது என ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ஓமனுக்கு எதிரான தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டார்.
இந்த நிலையில், மெதுவான ஆடுகளங்களும் குறைந்தபட்ச ஸ்கோர்களும் நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரின் கருப்பொருளாக இருப்பது போல் தெரிகிறது என மார்கஸ் ஸ்டாய்னிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இதுவரை நடந்த போட்டிகளைப் பார்க்கும்போது ஆடுகளத்தின் தன்மை அதிர்ச்சியளிப்பதாக இல்லை என நினைக்கிறேன். மெதுவான ஆடுகளங்களும் குறைந்தபட்ச ஸ்கோர்களும் நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரின் கருப்பொருளாக மாறிவிடும் என நினைக்கிறேன். இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாட வீரர்கள் தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும் என்றார்.
ஓமனுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 67 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.