
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ரிஷப் பந்த் தொடர்ந்து 3-வது வீரராக களமிறங்குவார் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று நடைபெற்ற தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி டி20 உலகக் கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி. நேற்றையப் போட்டியில் ரோஹித் சர்மா அரைசதம் எடுக்க, ரிஷப் பந்த் 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் ரிஷப் பந்த் தொடர்ந்து 3-வது வீரராக களமிறங்குவார் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ரிஷப் பந்த் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். பயிற்சி ஆட்டம் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான போட்டி என இரண்டிலுமே சிறப்பாக விளையாடினார். தற்போது இந்திய அணியில் 3-வது வீரராக ரிஷப் பந்த் தொடர்ந்து களமிறங்குவார். அவர் இடதுகை பேட்ஸ்மேனாக இருப்பது அணிக்கு உதவியாக இருக்கிறது. ஹார்திக் பாண்டியாவும் சிறப்பாக செயல்படுகிறார். பயிற்சி ஆட்டத்தின் போதும் அவர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அவர் 4 ஓவர்களை முழுவதும் வீசும் அளவுக்கு முழு உடல்தகுதியுடன் உள்ளார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.