டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஹாரி ப்ரூக் மிகவும் சவாலளிக்கும் விதமாக விளையாடுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்கடே திடலில் இன்று (மார்ச் 5) நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன.
இரண்டு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் இந்திய அணிக்கு மிகவும் சவாலளிக்கும் விதமாக விளையாடுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் ஹாரி ப்ரூக் அதிக அளவில் லெக் திசையில் ரன்கள் குவித்துள்ளார். இருப்பினும், ஹாரி ப்ரூக் ஆஃப் திசையிலும் மிகவும் நன்றாக விளையாடக் கூடியவர். அதனால், புள்ளிவிவரங்கள் ஒருபுறமிருந்தாலும், பேட்டர்களின் பலம் என்னவென்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஹாரி ப்ரூக் அதிகமாக லெக் திசையில் ரன்கள் குவிக்கிறார். ஆனால், அவரால் ஆஃப் திசையிலும் ரன்கள் குவிக்க முடியும். அவரை ஆட்டமிழக்கச் செய்வது எப்படி? பந்துவீச்சாளர்கள் ஸ்டம்புக்கு குறிவைத்து பந்துவீச வேண்டும். ஏனெனில், அவர் பந்தினை அடிக்கத் தவறும்போதெல்லாம் அவரது விக்கெட்டினைக் கைப்பற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கு அதிகமாகும். ஸ்டம்புக்கு பந்துவீசும்போது, அவர் ஆஃப் திசையில் அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.
ஹாரி ப்ரூக்குக்கு எதிராக வருண் சக்கரவர்த்தி மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளராக இருப்பார் என நினைக்கிறேன். ஏனெனில், ஸ்வீப் ஷாட்டுகளை விளையாட விரும்புபவர் ஹாரி ப்ரூக். அதனால், அவரது விக்கெட்டினை வருண் சக்கரவர்த்தி கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது. இந்திய பந்துவீச்சாளர்கள் ஸ்டம்பை குறிவைத்து பந்துவீசி நெருக்கடி அளித்தால் அதுவே போதுமானதாக இருக்கும் என்றார்.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சதம் விளாசிய முதல் கேப்டன் என்ற சாதனையை ஹாரி ப்ரூக் படைத்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Pujara says Harry Brook will be a very challenging batsman in the semi-final against India in the T20 World Cup.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பையில் அதிக கோல்கள்..! சாதனையை சமன்செய்த ஹாரி கேன்!

டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!







