
வெற்றி பெறுவதற்கு சிறப்பாக விளையாடுவதுதான் முக்கியமே தவிர, எதிரணியோ ஆடுகளமோ இல்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் நாளை (ஜூன் 9) நியூயார்க்கில் நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், வெற்றி பெறுவதற்கு சிறப்பாக விளையாடுவதுதான் முக்கியமே தவிர, எதிரணியோ ஆடுகளமோ இல்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: 7 மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தானுக்கு எதிராக ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடினோம். அதன்பின், நாளை டி20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ளோம். பெரிதாக எந்த ஒரு மாற்றமும் இல்லை. அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு விளையாட விரும்புகிறேன். நியூயார்க் ஆடுகளங்களைப் பற்றி புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் விளையாடுவது சவாலனதாக உள்ளது. ஆடுகளங்களை சீரமைப்பவர்களும் ஆடுகளம் குறித்து புரிந்துகொள்ள சிரமப்படுகிறார்கள். ஆடுகளங்கள் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.