டி20 உலகக் கோப்பைக்காக உருவாக்கப்பட்ட தற்காலிக மைதானம் தகர்ப்பு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக நியூயார்க்கில் உருவாக்கப்பட்ட தற்காலிக மைதானம் தகர்க்கப்பட உள்ளது.
டி20 உலகக் கோப்பைக்காக உருவாக்கப்பட்ட தற்காலிக மைதானம் தகர்ப்பு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக நியூயார்க்கில் உருவாக்கப்பட்ட தற்காலிக மைதானம் தகர்க்கப்பட உள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் கிட்டத்தட்ட வெறும் 100 நாள்களுக்குள் புதிய கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டது. இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் இந்த மைதானத்தில் நடைபெறும் போட்டிகள் நிறைவடைந்ததால், தற்காலிக மைதானத்தை தகர்க்கும் பணிகள் தொடங்கவுள்ளன.

டி20 உலகக் கோப்பைக்காக உருவாக்கப்பட்ட தற்காலிக மைதானம் தகர்ப்பு!
சூர்யகுமார் யாதவை பாராட்டிய முன்னாள் இந்திய வீரர்!

இது தொடர்பாக சில நாள்களுக்கு முன்பு பிரபல ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தி: ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும் போட்டிக்குப் பிறகு நியூயார்க்கில் உருவாக்கப்பட்ட தற்காலிக மைதானம் பிரிக்கப்படும். அந்த மைதானம் லாஸ் வேகாஸில் நடைபெறவுள்ள கோல்ஃப் போட்டிக்காக அங்கு மாற்றப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

டி20 உலகக் கோப்பைக்காக அமைக்கப்பட்ட நியூயார்க் மைதானத்தின் ஆடுகளங்கள் பல்வேறு கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது. புதிய ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானதாகவும், பேட்ஸ்மேன்களுக்கு ரன்கள் குவிக்க கடினமானதாகவும் இருந்தது. இந்த மைதானத்தில் உள்ள ஆடுகளங்களின் தன்மையை புரிந்துகொள்ளவே முடியவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் கூறியிருந்தார்.

டி20 உலகக் கோப்பைக்காக உருவாக்கப்பட்ட தற்காலிக மைதானம் தகர்ப்பு!
முகமது சிராஜுக்கு பதில் அர்ஷ்தீப் சிங் அணியில் இடம்பெற வேண்டும்: அனில் கும்ப்ளே

நியூயார்க் மைதானத்தில் 8 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்தப் போட்டிகளின் முடிவுகளும் யாராலும் கணிக்க முடியாத அளவுக்கு இருந்தது. சில நேரங்களில் இந்த ஆடுகளங்களில் ஆபத்தான பௌன்சர்களும் இருந்தன. இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் எந்த அணியும் 100 ரன்களைக் கடக்கவில்லை. அமெரிக்காவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்திய அணியால் துரத்திப் பிடிக்கப்பட்ட 111 ரன்களே, இந்த மைதானத்தில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com