சூப்பர் 8 சுற்றில் நுழையப்போவது யார்? வங்கதேசமா அல்லது நெதர்லாந்தா?

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு 7 அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில், 8-வது அணியாக எந்த அணி தகுதி பெறப்போகிறது.
சூப்பர் 8 சுற்றில் நுழையப்போவது யார்? வங்கதேசமா அல்லது நெதர்லாந்தா?
Published on
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு 7 அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில், 8-வது அணியாக எந்த அணி தகுதி பெறப்போகிறது என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடர் கடந்த ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 2 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும். குரூப் ஏ பிரிவில் இந்திய அணியும், அமெரிக்க அணியும் தகுதி பெற்றுள்ளன.

சூப்பர் 8 சுற்றில் நுழையப்போவது யார்? வங்கதேசமா அல்லது நெதர்லாந்தா?
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கவலையில்லை: பேட்டிங் பயிற்சியாளர்

குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் தகுதி பெற்றுள்ளன. குரூப் சி பிரிவில் ஆப்கானிஸ்தானும், மேற்கிந்தியத் தீவுகளும் தகுதி பெற்றுள்ளன. குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்க அணி தகுதி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது அணியாக எந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குரூப் டி பிரிவில் நேபாளம் மற்றும் இலங்கை அணிகள் ஏற்கனவே உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டன. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதற்கான போட்டியில் வங்கதேசமும், நெதர்லாந்தும் இடம்பெற்றுள்ளன.

வங்கதேசதம் அதன் கடைசி லீக் போட்டியில் நேபாளத்தை வெற்றி பெற்றுவிட்டால் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். நேபாளத்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் தோல்வியடைந்து இலங்கைக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து தோல்வியடைந்தாலும், வங்கதேசம் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும்.

சூப்பர் 8 சுற்றில் நுழையப்போவது யார்? வங்கதேசமா அல்லது நெதர்லாந்தா?
டி20 உலகக் கோப்பைத் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள்!

நெதர்லாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற நல்ல நெட் ரன் ரேட்டில் இலங்கை அணியை வெற்றி பெற வேண்டும். அதேசமயம், வங்கதேச அணியும் நேபாளத்திடம் தோல்வியடைய வேண்டும். இந்த இரண்டும் நடைபெறும் பட்சத்தில், நெதர்லாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com