
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து எந்தவொரு கவலையும் இல்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. நேற்று நடைபெறவிருந்த இந்திய அணிக்கான கடைசி லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டபோதிலும், தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி சரியாக விளையாடவில்லை என்பது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக உள்ளது.
இருப்பினும், விராட் கோலியின் ஃபார்ம் குறித்து எந்தவொரு கவலையும் இல்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் பத்திரிகையாளர்களை சந்திக்க வரும்போதெல்லாம் விராட் கோலி குறித்து என்னிடம் கேள்வி கேட்கப்படுகிறது. அது எனக்கு பிடித்திருக்கிறது. விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஐபிஎல் தொடரிலிருந்தே அவர் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஓரிரு முறை ஆட்டமிழந்தது பெரிய அளவில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார். அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு தயாராக இருக்கிறார். அவரிடமிருந்த பல சிறந்த இன்னிங்ஸ்களை நாம் பார்த்துள்ளோம் என்றார்.
நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.