ஐசிசியின் விதிகளை மீறிய வங்கதேச வீரருக்கு அபராதம்!

ஐசிசியின் விதிகளை மீறிய வங்கதேச வீரருக்கு அபராதம்!

டி20 உலகக் கோப்பையில் ஐசிசியின் விதிகளை மீறியதால் வங்கதேச வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Published on

டி20 உலகக் கோப்பையில் ஐசிசியின் விதிகளை மீறியதால் வங்கதேச வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பையில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் ஐசிசியின் விதிகளை மீறியதால் வங்கதேச வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்துக்கு எதிரான போட்டியில் 3ஆவது ஓவரில் இந்த சம்பவம் நடைபெற்றது. கிங்ஸ்டௌன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நேபாள அணியின் கேப்டன் (அணித் தலைவர்) ரோஹித் பௌடேல் உடன் வங்கதேச பந்து வீச்சாளர் தன்சிம் ஹாசன் ஷகிப் வாய் தகராறில் ஈடுபட்டார்.

ஐசிசியின் விதிகளை மீறிய வங்கதேச வீரருக்கு அபராதம்!
தலைமைப் பொறுப்பிலிருந்து விலகக் காரணம் என்ன? வில்லியம்சன் பதில்!

இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய 21 வயது தன்சிம் ஹாசன் ஷகிப் 4 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

போட்டியின் நடுவர்கள் ஐசிசியின் விதிகளை மீறியதால் போட்டியின் சம்பளத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதமாக விதித்தார்கள். இந்த அபராதத்தினை தன்சிம் ஹாசன் ஷகிப் ஏற்றுக்கொண்டுள்ளார்.

வங்கதேச அணி டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் வியாழக்கிழமை (ஜூன் 20) ஆஸ்திரேலிய அணியுடன் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com