
நியூசிலாந்து அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விலகுவதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
33 வயதாகும் கேன் வில்லியம்சன் 165 ஒருநாள் போட்டிகளில் 6811 ரன்களும் 93 டி20 போட்டிகளில் 2575 ரன்களும் 100 டெஸ்டில் 8743 ரன்களும் எடுத்துள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதனைத் தொடர்ந்து கேன் வில்லியம்சன் வெள்ளைப் பந்து கிரிக்கெட் (ஒருநாள், டி20 ) போட்டிகளில் இருந்து அணித் தலைவர் (கேப்டன்சி) பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகக் காரணம் என்ன?
நியூசிலாந்து அணியை பல விதமான கிரிக்கெட் போட்டிகளில் அடுத்த கட்டத்துக்கு முன்னேற்ற உதவியதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளேன். அதற்கான எனது பங்களிப்பினை தொடர முயற்சிக்கிறேன்.
அப்படியிருந்தும் நியூசிலாந்து அணியின் கோடைக் கால வெளிநாட்டு கிரிக்கெட் பயணத்தில் நான் பங்கேற்கப்போவதில்லை. நியூசி. அணியின் மத்திய ஒப்பந்தத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எனது பொக்கிஷம்; அணிக்காக திருப்பி கொடுக்கும் ஆசை என்பது இன்னும் மீதியிருக்கிறது. கிரிக்கெட்ட்டுக்கு வெளியே எனது வாழ்க்கை மிகவும் மாறிவிட்டது. குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதும் அவர்களுடன் வீட்டில் அல்லது வெளிநாட்டில் இருக்கும் அனுபவத்தினைப் பெறுவதும் எனக்கு முக்கியமாகப்படுகிறது.
வில்லியம்சனின் சாதனைகள்:
2015,2019 உலகக் கோப்பை ,2021 டி20 உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெற்றி ஆகியவை வில்லியம்சனின் தலைமையில் பெற்ற சாதனைகளாகும்.
2016இல் இருந்து கேப்டன்சி பொறுப்பில் இருக்கும் கேன் வில்லியம்சன் 2022இல் டெஸ்ட் கேப்டன்சியில் இருந்தும் வில்லியம்சன் விலகியது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் 91 போட்டிகளில் 46 போட்டிகளில் வென்றிருக்கிறார். 75 டி20 போட்டிகளில் 39 போட்டிகளில் வென்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.