
டி20 உலகக் கோப்பையை வென்று வெற்றியுடன் டேவிட் வார்னர் விடைபெற வேண்டும் என நினைப்பதாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.
நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி வருகிறார். நடப்பு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டேவிட் வார்னர் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்று வெற்றியுடன் டேவிட் வார்னர் விடைபெற வேண்டும் என நினைப்பதாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டேவிட் வார்னரின் நண்பராக அவர் உலகக் கோப்பையை வென்று வெற்றியுடன் கிரிக்கெட் பயணத்தை முடிக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் நன்றாக விளையாடுவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவை தோற்கடித்தால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறும். ஆஸ்திரேலிய அணி இந்தியாவை கண்டிப்பாக வெல்ல முடியும் என நினைக்கிறேன். வாழ்வா? சாவா? போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி எப்போதும் சிறப்பாக விளையாடும் என்றார்.
சூப்பர் 8 சுற்றில் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியா இன்று இந்திய அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.