டி20 லீக் போட்டிகளைக் காட்டிலும் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாடுவதற்கு வீரர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அந்த அணியின் கேப்டன் ரோவ்மன் பௌவல் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது. கடந்த இரண்டு டி20 உலகக் கோப்பைத் தொடர்களிலும் விரைவில் வெளியேறிய மேற்கிந்தியத் தீவுகள் நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதிக்கு அருகில் வந்து வெளியேறியுள்ளது.
இந்த நிலையில், டி20 லீக் போட்டிகளைக் காட்டிலும் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாடுவதற்கு வீரர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அந்த அணியின் கேப்டன் ரோவ்மன் பௌவல் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகள் அணி மீதான பார்வை அதிகரித்துள்ளது. நாங்கள் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த ஓரிரு ஆண்டுகளாக மேற்கிந்தியத் தீவுகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டி20 லீக் போட்டிகளைக் காட்டிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடுவதற்கு வீரர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அணியின் கேப்டனாக மேற்கிந்தியத் தீவுகளுக்காக வீரர்கள் விளையாடுவதை தொடர்ந்து ஊக்குவிப்பேன். அதிக அளவிலான ஊதியம் கிடைக்கும் டி20 லீக் கிரிக்கெட், சிறிய கிரிக்கெட் வாரியங்களைக் கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் போன்ற அணிகளுக்கு சிறந்த வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்குவதை கடினமாக்குகிறது. நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடர் மட்டுமல்லாது, கடந்த ஓராண்டாக மேற்கிந்தியத் தீவுகள் சிறப்பாக விளையாடி வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘உலக சாம்பியனுக்கே இந்த நிலைமையா’... உலகக் கோப்பை நேரடி தகுதியை இழந்த மேற்கிந்தியத் தீவுகள்!

14 மாதங்களில் 5 கோப்பைகளை வென்ற ரொமாரியோ ஷெப்பர்ட்!

டிரினிடாட் டெஸ்ட்: பாகிஸ்தான் சுழலில் தடுமாறும் மேற்கிந்தியத் தீவுகள்!

சொந்த மண்ணை எங்களுடைய கோட்டையாக மாற்ற வேண்டும்: மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன்
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | விஜய்க்கு பாஸ்மார்க் | CM Vijay | TVK | TVK 100 | Trisha





