
டி20 உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசி மேற்கிந்தியத் தீவுகள் சாதனை படைத்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தியது. இதன்மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது.
அரையிறுதிக்கான வாய்ப்பினை இழந்தபோதிலும், மேற்கிந்தியத் தீவுகள் டி20 உலகக் கோப்பைத் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய அணி என்ற சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் அணி படைத்துள்ளது.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 62 சிக்ஸர்களை விளாசியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணி 57 சிக்ஸர்கள் விளாசியதே டி20 உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்களாக இருந்தது. ஆஸ்திரேலியாவின் அந்த சாதனையை தற்போது மேற்கிந்தியத் தீவுகள் முறியடித்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள்
மேற்கிந்தியத் தீவுகள் - 62 சிக்ஸர்கள் (2024)
ஆஸ்திரேலியா - 57 சிக்ஸர்கள் (2010)
மேற்கிந்தியத் தீவுகள் - 49 சிக்ஸர்கள் (2012)
மேற்கிந்தியத் தீவுகள் - 43 சிக்ஸர்கள் (2016)
அமெரிக்கா - 42 சிக்ஸர்கள் (2024)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.