ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; மூத்த வீரர்களுக்கு ஓய்வு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இன்று (ஜூன் 24) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் (கோப்புப் படம்)
இந்திய வீரர்கள் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இன்று (ஜூன் 24) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளைடாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற ஜூலை 6 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்திய வீரர்கள் (கோப்புப் படம்)
மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முக்கியத்துவம் கொடுங்கள்: மே.இ.தீவுகள் கேப்டன்!

இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இன்று (ஜூன் 24) அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹார்திக் பாண்டியா,சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்பட மூத்த வீரர்கள் பலருக்கும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இந்த டி20 தொடருக்கு ஷுப்மல் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்கள் பலரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய வீரர்கள் (கோப்புப் படம்)
ஆப்கானிஸ்தான் மிகவும் வலிமையான அணி; ஆஸ்திரேலிய வீரர் பாராட்டு!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்

ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜுரெல், நிதீஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார் மற்றும் துஷார் தேஷ்பாண்டே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com