சூப்பர் 8 சுற்றில் அசத்தலாக விளையாடிய இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் நாளை இங்கிலாந்துடம் மோதுகிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இந்திய அணி பெரும்பாலும் நாக் அவுட் சுற்றுகளில் தோல்வியை அடைந்துவிடுகின்றன. ஒன்று அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிகளில் தோல்வியடைகிறது.
கடைசியாக இந்திய அணி 2011இல் எம்.எஸ்.தோனி தலைமையில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு ஐசிசியின் எந்த ஒரு உலகக் கோப்பையையும் இந்திய ஆடவர் அணி வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாளைய போட்டியில் இங்கிலாந்தினை வெல்லுமா மேலும் 2022இல் இங்கிலாந்திடம் ஏற்பட்ட தோல்விக்கு அந்த அணியை பழிவாங்குமா எனவும் இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
டி20 உலகக் கோப்பை போட்டி அரையிறுதி ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டால் இந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.