
ஜஸ்பிரித் பும்ரா தன்னைவிட ஆயிரம் மடங்கு சிறப்பானவர் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (ஜூன் 27) மோதவுள்ளன. முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா தன்னைவிட ஆயிரம் மடங்கு சிறப்பானவர் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ரா என்னைவிட ஆயிரம் மடங்கு சிறப்பானவர். இளம் வீரர்கள் நம்மைவிட சிறப்பாக செயல்படுகிறார்கள். நம்மிடம் நிறைய அனுபவம் இருக்கிறது. ஆனால், இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். இளம் வீரர்கள் அனைவரும் நன்றாக செயல்படுகிறார்கள். அவர்கள் கடின உழைப்பை வெளிப்படுத்துகிறார்கள் என்றார்.
இதுவரை இந்திய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜஸ்பிரித் பும்ரா 159 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகளையும், 68 டி20 போட்டிகளில் விளையாடி 85 விக்கெடுட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை ஜஸ்பிரித் பும்ரா 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.